கார் ரேஸை பார்வையிடும் அஜித்தின் வீடியோ வைரல்

ak

நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி. அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இன்னும் 7 நாட்களுக்கான படப்பிடிப்பு பணிகள் மீதி இருப்பதாகவும் அதை படக்குழு வருகிற 15-ந்தேதி தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், பைக், கார் ரேசில் அதிக ஆர்வம் கொண்ட அஜித் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 13 வினாடிகளே ஓடும் வீடியோவில் கார் ரேசை ஆர்வமுடன் எட்டிப் பார்க்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 


 

Share this story