விதார்த் - ரம்யா நம்பீசன் கூட்டணியில் உருவாகியுள்ள 'என்றாவது ஒரு நாள்'... நேரடியாக டிவியில் வெளியீடு!?

enravathu-orunaal-3

விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'என்றாவது ஒரு நாள்' திரைப்படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி இயக்கத்தில் விதார்த் நடிப்பில் 'என்றாவது ஒரு நாள்' என்ற படம் உருவாகியுள்ளது. ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். 'தி தியேட்டர் பீப்பிள்' நிறுவனம் தயாரித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். படத்தில் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.

enravathu-orunaal-3

கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல் கொண்டு வந்த இடப்பெயர்வு கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளது. படத்தில் தண்ணீர் பஞ்சம், குழந்தைத் தொழிலாளர்கள் ஆகியவற்றையும் இயக்குனர் கையாண்டுள்ளார். இந்தப் படம் சென்னை திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது வென்றது குறிப்பித்தக்கது. 

தற்போது இந்தப் படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்தப் படம் நேரடியாக ஒளிபரப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story