அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த ‘விடுதலை 2’

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விடுதலை பாகம் 1’. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருந்த இப்படம் தமிழைத் தாண்டி தெலுங்கிலும் வெளியானது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராஜ் காஷ்யப், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனிடையே கடந்த பிப்ரவரியில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. அப்போது பார்வையாளர்கள் 5 நிமிடங்கள் கைத்தட்டி படக்குழுவினரை பாராட்டினர்.
Director #VetriMaaran 's #ViduthalaiPart2 dubbing kickstarts from today. Check out dubbing pics ft #Vijaysethupathi & #Soori
— Red Giant Movies (@RedGiantMovies_) October 10, 2024
An @ilaiyaraaja Musical @VijaySethuOffl @sooriofficial @elredkumar @rsinfotainment @GrassRootFilmCo @ManjuWarrier4 @BhavaniSre @anuragkashyap72… pic.twitter.com/QWBkEJAT2a
இதையடுத்து கடந்த ஜூலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. இதையடுத்து அடுத்த மதமான ஆகஸ்டில் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பூஜையும் நடத்தியுள்ளது படக்குழு. இதில் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.