ஓடிடியில் மீண்டும் வெளியாகும் விடுதலை 2.. இந்த முறை ஒரு ட்விஸ்ட் இருக்கு.!

விடுதலை படத்தின் இரண்டு பாகமும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியான பின்னரும் பலரும் ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களையும் பார்த்து ரசித்து வருகின்றனர்.
திரையரங்குகளில் இந்த படம் வெளியான பொழுது 2 மணி நேரம் 46 நிமிடங்கள் மட்டுமே ரன்னிங் டைம் இருந்த நிலையில், தற்போது நீக்கப்பட்ட சில காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணி நேரம் 7 நிமிடங்கள் கொண்ட படமாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்கிற கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படம் கம்யூனிச சித்தாந்தங்களை அதிகமாக பேசுவதாக விமர்சனங்கள் இருந்த நிலையில், தற்போது நீக்கப்பட்ட காட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகி இருக்கிறது.