'விடுதலை' முதல் பாடல் வெற்றி.. இளையராஜாவை சந்தித்து நன்றி தெரிவித்த வெற்றிமாறன் !

ViduthalaiPart1

'விடுதலை' படத்தின் முதல் பாடல் வெற்றியையடுத்து இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து இயக்குனர் வெற்றிமாறன் நன்றி தெரிவித்துள்ளார். 

விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், இயக்குனர் தமிழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. 

ViduthalaiPart1

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். 

ViduthalaiPart1

இந்த படத்தின் முதல் பாடலான ‘ஒன்னோட நடந்தா’ என தொடங்கும் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இளையராஜா இசையில் உருவான இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார். சுகா எழுதிய இந்த பாடல் யூடியூப்பில் வெளியாகி 2 மில்லியன் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த இளையராஜாவை சந்தித்து வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் நன்றி தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Share this story