'விடுதலை' ஒரு மறக்க முடியாத பயணம் : நடிகர் சூரி நெகிழ்ச்சி

soori

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, கெளதம் வாசுதேவ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் 20ஆம்  தேதி வெளியான படம் விடுதலை பாகம் 2. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தின் முதல் பாகமான விடுதலை பாகம் 1 வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி., நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பி.சி.ஸ்ரீராம், மாரி செல்வராஜ், ராஜு முருகன் உள்ளிட்ட பலரது பாராட்டுகளை பெற்றது. இந்த வெற்றியை படக்குழு வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியது.



இந்த நிலையில் இப்படம் தற்போது 25 நாளை கடந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி சூரி தற்போது அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “விடுதலை 1 மற்றும் விடுதலை 2 என் வாழ்க்கையில் மிகவும் மாற்றத்தை ஏற்படுத்திய படமாக எப்போதும் இருக்கும். குமரேசனாக நடிப்பது என் வாழ்க்கையில் என்றென்றும் ஒரு சிறப்பு வாய்ந்தது. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சிறப்பு மற்றும் மகிழ்ச்சியான பாத்திரமாக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாகவும், வார்த்தைகளால் விவரிக்க முடியாதவனாகவும் இருக்கிறேன்.

இந்த மறக்க முடியாத பயணத்தை சாத்தியமாக்கிய எனது இயக்குநர் வெற்றிமாறன், எனது தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார் மற்றும் எனது சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு பெரிய நன்றி. அனைத்து உதவியாளர் மற்றும் இணை இயக்குநர்களுக்கும் ஒரு சிறப்பு பாராட்டு - உங்கள் கடின உழைப்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு இல்லாமல், இவ்வளவு சிறப்பு வாய்ந்த திட்டத்தில் நான் இந்த மைல்கல்லை எட்டியிருக்க மாட்டேன்”எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share this story