வெற்றிமாறனின் ‘விடுதலை- பாகம் 1’ படத்தின் ‘ஒன்னோட நடந்தா’ லிரிக்கல் பாடல் வெளியீடு.

வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் விடுதலை. இந்த படத்தின் கதாநாயகனாக சூரி நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதி போராளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ள இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.
ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள விடுதலை திரைப்படம் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். இளையராஜா மற்றும் தனுஷ் கூட்டணியில் தயாராகியுள்ள “ஒன்னோட நடந்தா…” லிரிக்கல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
ஒன்னோடு நடந்தா படலை தனுஷ் மற்றும் அனன்யா பட் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை சுகா அமைத்துள்ளார். பாடல் ரசிகர்களை வெகுவாக் ஈர்த்துள்ளது. இளையராஜா, தனுஷ் கூட்டணியில் தயாராகும் முதல் பாடல் இதுவாகும்.