இளையராஜா இசையில் பாடிய தனுஷ்... துள்ளலான 'விடுதலை' ஃப்ர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ !

வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தில் தனுஷ் பாடிய ஃப்ர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ பாடல் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகிய இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் திரைப்படம் ‘விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் முதல் பாகத்தில் சூரி கதாநாயகனாகவும், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், இயக்குனர் தமிழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் இப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான 'உன்னோடு நான்தான்' என தொடங்கும் பாடலை தனுஷ் பாடியுள்ளார். இளையராஜா இசையமைத்து பாடியுள்ள இந்த பாடலை தனுஷ் மற்றும் அனன்யா பட் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்பாடலை இளையராஜா இசையில் தனுஷ் பாடும் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
#Viduthalai Part 1 - 1st single track new promo is here , #OnnodaNadandhaa releasing tomorrow @ 11 AM. 🎼 @ilaiyaraaja
— r.s.prakash (@rs_prakash3) February 7, 2023
🎤@dhanushkraja #Vetrimaaran @elredkumar @VijaySethuOffl @sooriofficial @rsinfotainment @RedGiantMovies_ @mani_rsinfo @DoneChannel1 pic.twitter.com/66BtM9Ct0D