“என் அப்பா, அம்மா செய்த புண்ணியம்’’ - இளையராஜா இசையில் நடித்தது குறித்து சூரி நெகிழ்ச்சி

soori

 இசையமைப்பாளர் இளையராஜா இசையில் நடித்தது குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். 

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் சூரி போலீசாகவும், விஜய் சேதுபதி போராளியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், இயக்குனர் தமிழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

soori

இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தை பிரபல நிறுவனமான உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

soori

வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ‘ஒன்னோடு நடந்தா’ பாடல் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். 

இந்த பாடல் வெளியானது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூரி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் என் அப்பா அம்மா செய்த புண்ணியம் , என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம், இசைஞானி இளையராஜா  ஐயாவின் முத்தான பாடலில் எனக்கு நடிக்க கிடைத்த இந்த வாய்ப்பு. இதை ஏற்படுத்தி தந்த வெற்றிமாறன் அண்ணனுக்கும், பாடலாசிரியர் சுகா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார். 


அதேபோன்று சொக்க வைக்கும் குரலில் இந்த அற்புதமான பாடலை பாடி தந்த தனுஷ் சாருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. இந்த படைப்பில் உங்களின் இந்த பங்களிப்பு எங்களுக்கு எல்லாம் பெருமை சார் என்று குறிப்பிட்டுள்ளார். 


 

Share this story