இளையராஜாவின் வருடும் இசையில் ‘காட்டு மல்லி’... ‘விடுதலை’ படத்தின் வீடியோ பாடல் வெளியீடு !

Viduthalai

‘விடுதலை’ படத்தில் மனதை வருடும் காட்டு மல்லி வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

வெற்றிமாறனின் வித்தியாசமான படைப்பாக உருவாகி வெளியான திரைப்படம் ‘விடுதலை’. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Viduthalai

ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிட்டுள்ளது. இந்தபடத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், இயக்குனர் தமிழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Viduthalai

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்திற்கு வெற்றிக்கு இளையராஜாவின் இசையும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. அந்த வகையில் இசையில் உருவான ‘காட்டு மல்லி’ பாடலின் வீடியோ வெர்ஷனை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

Share this story