சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட ட்ரெயின் காட்சி... மேக்கிங் வீடியோ வெளியீடு !

'விடுதலை' படத்தில் இடம்பெற்றுள்ள ட்ரெயின் காட்சியின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி போலீசாகவும், நடிகர் விஜய் சேதுபதி போராளியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் கெளதம் மேனன், பிரகாஷ்ராஜ், பவானி ஸ்ரீ, சேத்தன், தமிழ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதா. ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு அற்புதமான பின்னணி இசையை இளையராஜா கொடுத்துள்ளனர். திரையரங்கில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த வசூலையும் குவித்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் முதல் காட்சியாக ரெயில் விபத்து ஒன்று பிரம்மாண்டமாக காட்டப்பட்டிருக்கும். தற்போது அந்த காட்சி உருவாக்கப்பட்ட விதம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த காட்சியை பார்க்கும் சிலிர்க்க வைக்கிறது. அதே நேரம் இந்த காட்சியை எடுக்க படக்குழுவினர் எடுத்த சிரத்தை வியப்பை ஏற்படுத்துகிறது.
The most-talked about #Vetrimaaran's #ViduthalaiPart1 Train Making Sequence! ❤️🔥
— Sony Music South (@SonyMusicSouth) April 3, 2023
Watch the making video here 💥 ➡️ https://t.co/3P96fshL39@ilaiyaraaja @VijaySethuOffl @sooriofficial @rsinfotainment @BhavaniSre @GrassRootFilmCo@RedGiantMovies_ @mani_rsinfo #Viduthalai pic.twitter.com/bMvjBzM78f