ஆக்ஷன்……- பக்கா மாஸ்ஸாக உருவாகியுள்ள ‘விடுதலை’ படம்- மேக்கிங் வீடியோ இதோ.
வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகியுள்ள விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள விடுதலை படத்தை பிரபல முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ராஜிவ் மேனன், சேட்டன், இளவரசு, டாணாக்காரன் இயக்குநர் தமிழ் உள்பட பலரும் படத்தில் நடித்துள்ளார்கள், இரண்டு பாகங்கள் கொண்ட இந்த படத்தின் முதல் பாகம் மார்ச் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
படத்திற்காக படக்குழுவினர் எந்த அளவிற்கு உழைத்துள்ளனர் என்பது இந்த மேக்கிங் வீடியோவில் நன்றாக தெரிகிறது. இளையராஜா இசையமைப்பில் தயாராகியுள்ள இந்த படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக காத்துள்ளனர். ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இத்திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.