குடியரசு தினத்தில் ‘விடுதலை’ அப்டேட் – வைரலாகும் புகைப்படங்கள்.

photo

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டேர் முன்னணி கதாப்பாத்திரங்களில்  நடித்துள்ள திரைப்படம் ‘விடுதலை’ எல்ரெட் குமார் தயாரித்துள்ள  இந்த படத்தின் மாஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

photo

photo

சூரி கதாநாயகநாகவும், விஜய் சேதுபதி போராளியாகவும் நடித்துள்ள விடுதலை படத்திற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக இளையராஜா, சண்டைக் காட்சிகளின் இயக்குநராக பீட்டர் ஹெய்ன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள இந்த படத்தின் ஒட்டு  மொத்த படப்பிடிப்பும் முடிந்து தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளது, அதாவது படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

photo

photo

இந்த ஆண்டின் முதல் பாதியில் படத்தின் முதல் பாகம் வெளியாகும் என தகவல் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள்  சூடுபிடிக்க தொடங்கியுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா நடிக்க இருக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க இருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

photo

 

 

Share this story