மார்ச் மாத இறுதியில் வெளியாகும் ‘விடுதலை’.. வெற்றிமாறனின் அதிரடி திட்டம் !

viduthalai

வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படம் எப்போது வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகிய இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் திரைப்படம் ‘விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் முதல் பாகத்தில் சூரி கதாநாயகனாகவும், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்துள்ளனர். 

viduthalai

இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், இயக்குனர் தமிழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். 

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதையடுத்து முழு வீச்சில் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வரும் மார்ச் 31-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழில் பிரம்மாண்டமாக வெளியிடவும் முடிவு செய்துள்ளது. 

Share this story