துப்பாக்கியுடன் வெற்றிமாறன் - ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு.

photo

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் 'விடுதலை'. இவர்களோடு இணைந்து இந்த படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் என பலர் நடித்துள்ளனர்.  இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

photo

photo

இரண்டு பாகங்களாக தயாராகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இன்று படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் வெற்றிமாறன், நடிகர் சூரி, வேல்ராஜ் என படக்குழுவினர் உள்ளனர் அவர்களின் கைகளில் துப்பாகியுடன் வெற வேறலெவலில் போஸ்ஸும் கொடுத்துள்ளனர்.  

photo

photo

ஜெயமோகன் எழுதியதுணைவன்என்கிற சிறுகதையை திரைக்கதையாக விரித்து, ‘விடுதலையை வெற்றிமாறான் படமாக இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்தின் ரிலீஸ் பற்றி அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Share this story