சம்பளம் முக்கியமல்ல... கேரக்டர் முக்கியம் - நடிகர் சூரி !

soori

 தனக்கு சம்பளம் முக்கியமல்ல, கேரக்டர் தான் முக்கியம் என கூறி விடுதலை படத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். 

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. இரு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. 

soori

இந்த படத்தில் நடிகர் சூரி கான்ஸ்டபிளாகவும், நடிகர் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் மார்ச் 31-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படம் பிரிவினை குறித்து பேசியுள்ளதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

soori

சூரியின் போலீஸ் கதாபாத்திரம் சினிமாவில் அவருக்கு திருப்புமுனையாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படம் வெளியாகாத நிலையில் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சூரி 40 லட்சம் மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளார். அதாவது ஒரு பாகமாக எடுக்கும் போது 30 லட்சம் பேசப்பட்ட நிலையில் இரண்டு பாகமாக படம் உருவானதால் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூரியின் சம்பளம் குறைவாக இருந்தாலும், கதாபாத்திரம் தான் முக்கியம் என நடித்து முடித்துள்ளார் சூரி. 

 

 

Share this story