யார் பிரிவினைவாதி? வெளியானது ‘விடுதலை’ படத்தின் தரமான டிரைலர்.

photo

வெற்றிமாறன் இயக்கத்தில் தயாரான ‘விடுதலை பாகம்1’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

photo

 ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள திரைபடம்விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் என பலர் நடித்துள்ளனர்.  இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிபதிவு செய்துள்ளார்.

photo

 வரும் மார்ச் 31ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரிக்கும் வண்ணம் டிரைலர் தரமானதாக வெளியாகியுள்ளது. அதாவது மக்கள் படை தலைவன் பெருமாள் கதாபாத்திரத்தை ஏற்று விஜய் சேதுபதி நடித்துள்ளார். காவல்துறையில் ஒரு கடைநிலை ஊழியனாக நடிகர் சூரி சிறாப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

காக்கிச்சட்ட போட்ற ஒவ்வொருத்தனுக்கும் ஒரு நேரம் வரும். அதுக்காக நம்ம காத்திருக்கணும்’, ‘மனுசனா பொறக்குறப்போ ஒருத்தன் மேல, ஒருத்தன் கீழ, ஒருத்தன் சைட்லனு பிரிக்கிற நீங்க பிரிவினைவாதிகளா? இல்ல சமுதாயத்துல எல்லோரும் ஒன்னுன்னு போராட்ற நாங்க பிரிவினைவாதிகளா?”  போன்ற அழுத்தமான வசனம் படத்தின் தரத்தை மேலும் கூட்டி படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.

Share this story