வெற்றி வாகை சூடிய ‘விடுதலை’ படத்தின் புதிய மேக்கிங் வீடியோ – தொடரும் வசூல் வேட்டை.

photo

சூரி கதையின் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் ‘விடுதலை’ படத்தின் புதிய மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

photo

கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தை கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான  வெற்றிமாறன் இயக்கியுள்ளார். நகைச்சுவை நடிகராக இருந்த சூரி இந்த படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். இதில் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

photo

இரண்டு பாகங்களாக தயாரான இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி படத்திற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகளை பெற்று தந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இரண்டாவது பாகத்தின் மீதான் எதிர்பார்பை அதிகரிக்க செய்துள்ளது. இந்த நிலையில் படத்தின் புதிய மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இதற்கு முன்னரும் மேக்கிங்  வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த வீடியோவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


விடுதலை திரைப்படம் வெளியானதிலிருந்து தற்போது வரை எவ்வளவு வாசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் 38 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தை பலரும் வெகுவாக பாராட்டி வருவதால், இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share this story