‘விடுதலை பாகம் 2’ விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை.

photo

சூரி கதையின் நாயகனாக நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற திரைப்படம் ‘விடுதலை பாகம் 1’. வெற்றிமாறனின் இயக்கத்தில் இது ஒரு தரமான படம் என பலரும் பாராட்டினர். சூரி காவலராகவும், விஜய் சேதுபதி போராளியாகவும் நடித்திருந்தனர். தொடர்ந்து இரண்டாவது பாகமும் வெளியாகும் என அப்போதே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இடண்டாவது பாகம் குறித்த சூப்பர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, இரண்டாவது பாகம் முழுவதும் விஜய் சேதுபதியை சுற்றியே கதை நகர உள்ளது. இந்த நிலையில்  விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கதையில் பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் இணைய போவதாக சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இரண்டாவது பாகத்திற்காக சில காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கபோகிறாராம்.

photo

இதற்கு முன்னர் ‘அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக  வெற்றிமாறன் படத்தில் பணியாற்றிய அனுபவம் மஞ்சுவாரியருக்கு உண்டு. அதனால் அவருக்கு படத்தில் நடிப்பது எளிதாக இருக்கும். விடுதலை பாகம் 2 இந்த வருடம் இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

Share this story