தனக்கு நடந்த casting couch குறித்து முதல் முறையாக மனம் திறந்த நடிகை ‘வித்யா பாலன்’.

photo

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை வித்யா பாலன். இவர் தனக்கு சினிமாவில் நடந்த casting couch குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

photo

44 வயதை கடந்த நடிகை வித்யாபாலன் சில்க் ஸ்மித்தாவின் வாழ்கையை மைய்யமாக வைத்து தயாரான ‘டர்ட்டி பிக்சர்’ படத்தின் மூலமாக இந்தியா அளவில் பிரபலமானார். தொடர்ந்து தமிழில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுருந்தார். சமீபத்தில் கூட  இவர் நிர்வாணமாக வெறும் நியூஸ் பேப்பரை மட்டும் வைத்து மறைத்துக்கொண்டு  எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக வைரலானது.

photo

இந்த நிலையில் இவர் தனக்கு சென்னையில் சினிமா துறையில் நடந்த பாலியல் சீண்டல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது’ சினிமாதுறையில் பெண்கள் பல இன்னல்களை சந்திக்கிறார் என பல கதைகளை நாம் கேட்டிருப்போம். அதனாலேயே எனது பெற்றோர்கள் என்னை சினிமாதுறைக்குள் அனுமதிக்கவில்லை.  ஆனால் நான் அப்படி  ஒரு மோசமான அனுபவத்தையும் சந்தித்தது இல்லை. இந்த ஒன்றை தவிர, அந்த நேரத்தில் நான் திறமையாக செயல்பட்டு ,ஹோட்டல் அறை கதவை திறந்தே வைத்துவிட்டேன், அப்போது வெளியில் செல்வது மட்டுமே எனக்கு ஒரே ஒரே வழி என்று. என் பாதுகாப்புக்காக அப்படி செய்தேன். அதற்கு பிறகு அந்த படத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள்’ என கூறியுள்ளார்.

photo

Share this story