வித்யாசாகர் இசையமைத்த "அஷ்ட ஐயப்ப அவதாரம்" தெய்வீக பாடல் வெளியீடு...!

vidya sagar

தமிழ் மற்றும் மலையாள சினிமா திரையுலகில் மிகவும் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராவார் வித்யாசாகர். இவரை அன்போடு ரசிகர்கள் அனைவரும் மெலடி கிங் என அழைப்பர். 1989 ஆம் ஆண்டு வெளியான `பூ மனம்' என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார். இதுவரை 225 மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் மிகப்பெரியளவில் ஹிட்டான தமிழ் திரைப்படங்களான ஜெய் ஹிந்த், தில், பூவெல்லாம் உன் வாசம், தவசி, ரன், வில்லன், தூள், இயற்கை, சந்திரமுகி,கில்லி, மொழி, குருவி என பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மலையாள திரையுலகில் இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் இசையமைப்பில் வெளியான நிறம், தேவதூதன், தோஸ்த், மீச மாதவன், முல்லா போன்ற மலையாள திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது. வித்யாசாகர் தற்பொழுது முதல்முதலாக அஷ்ட ஐயப்ப அவதாரம் என்ற தெய்வீக பாடல்கள் அடங்கிய ஆல்பம் ஒன்றை இசையமைத்துள்ளார்.

இது முழுவதும் ஐயப்பனை பற்றி பாடும் மலையாள பாடல்கள் இடம் பெற்றுள்ளன.இந்த ஆல்பத்தின் முதல் டைட்டில் பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை திருபுகழ் மதிவானன் வரிகளில் விஜய் பிரகாஷ் பாடியுள்ளார். இந்த பாடலின் வீடியோவில் வித்யாசாகர் பாடுவது போல் வீடியோ காட்சிகள் அமைந்துள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் ஐயப்பன் சீசன் என்பதால் இப்பாடலிற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. 

Share this story