விக்னேஷ் சிவன்- பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் பாலிவுட் கதாநாயகி -லேட்டஸ்ட் தகவல் இதோ!

photo

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த படத்திற்காக இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்துள்ள நிலையில் அந்த படத்தில் யார் கதாநாயகி மற்றும் படத்தின் தலைப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல் வந்துள்ளது.

photo

கோமாளி படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான பிரதீப் அவரது அடுத்த படமான லவ் டுடே படத்தில் நடிகராக அறிமுகானார். சுமார் 5 கோடி பட்ஜெட்டில் தயாரான அந்த படம் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் அவரது அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் பிரதீபுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் படத்தில் மிஷ்கின், எஸ் ஜே சூர்யா, யோகிபாபு ஆகியோர் நடிக்க உள்ளனர். அதுமட்டுமல்லாமல் பிரதீபுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. அனிரூத் இசையமைக்க உள்ளாரராம். அந்த படத்திற்கு LIC அதாவது லவ் இன்சுரன்ஸ் கம்பெனி என பெயரிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story