விக்னேஷ் ராஜா - தனுஷ் படத்தின் பணிகள் தீவிரம்...!

dhanush

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. `1`

‘குபேரா’ மற்றும் ‘தேரே இஸ்க் மெயின்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதில் ‘குபேரா’ படத்தின் டப்பிங் பணிகள் மற்றும் இறுதியாக சில நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. ‘தேரே இஸ்க் மெயின்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்பையில் தொடங்க இருக்கிறது. இந்த இரண்டையும் முடித்துவிட்டு வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் தனுஷ்.ddhanush

இப்படத்தை ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கவுள்ளார். இதன் கதை மற்றும் திரைக்கதை அனைத்துமே இறுதி செய்யப்பட்டுவிட்டன. தற்போது சென்னையில் அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அரங்கில் சுமார் 90 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி ஒட்டுமொத்த படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.இதில் தனுஷுக்கு நாயகியாக மமிதா பைஜு நடிக்கவுள்ளார். இதற்கு ‘அறுவடை’ எனத் தலைப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு படங்களையும் தனுஷ் முடித்து திரும்பியவுடன், படப்பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கப் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  

Share this story