மகன்களுக்கு பெயர் வைத்த நயன்தாரா... என்ன பெயர் தெரியுமா ?

nayanthara

 விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர் தங்களது குழந்தைகளுக்கு பெயர் வைத்துள்ளனர். 

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக நயன்தாரா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக்கொண்டார். திருமணமாகி 4 மாதங்கள் ஆன நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக நயன்தாரா - விக்கி ஜோடி அறிவித்தனர்.

nayanthara

அதன்பிறகு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுக்கொண்டதாக கூறினார். இதையடுத்து தங்களது குழந்தைகளை முகம் காட்டாமல் வெளியே அழைத்து சென்று வருகின்றனர். ஆனால் நயன்தாராவின் குழந்தைகளை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் உள்ளனர். 

nayanthara

இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியின் தங்களது குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர். அதன்படி உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன் என்று பெயர் வைத்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த பெயர்களை பார்த்த ரசிகர்கள் உற்சாகமாகி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Share this story