குலதெய்வம் கோயிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி.. சிறப்பு வழிப்பாடு நடத்தி பிரார்த்தனை !

nayanthara

கும்பகோணத்தில் அருகே உள்ள குலதெய்வம் கோயிலில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடி சிறப்பு வழிப்பாடு நடத்தினர். 

nayanthara

தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. நீண்ட நாட்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நடிகை நயன்தாரா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துக்கொண்டனர். 

nayanthara

இதையடுத்து நான்கு மாதங்களில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தனர். இந்த குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்தவை என்றும் அவர்கள் அறிவித்தனர். இந்த இரட்டை குழந்தைக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் பெயர் வைத்துள்ளனர். அதோடு தங்களுக்கு குழந்தையின் முகத்தை சமீபத்தில் வெளியுலகிற்கு காட்டினர். 

nayanthara

இந்நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியின் குலதெய்வமான தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மேல்வளத்தூரில் இருக்கும் ஆற்றங்கரையோரம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் இன்று சிறப்பு தரிசனம் செய்தனர். இதற்கான சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த அவர், பின்னர் கார் மூலம் கோவிலுக்கு சென்றனர். விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

nayanthara

nayanthara

 


 

Share this story