விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் : முத்தங்களை பரிமாறிய நயன் - விக்கி ஜோடி

Nayanthara

நடிகை நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை துபாயில் கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய க்யூட்டான கப்புல்ஸ்களில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரும் உள்ளனர். இவர்கள் காதலிக்கின்றார்கள் என்ற தகவல் வெளியானதில் இருந்து இப்போது வரை இவர்களை வாழ்த்தும் ரசிகர்கள் ஏராளம். நயன்தாராவோ, விக்னேஷ் சிவனோ, இவர்களில் யாருக்கு படப்பிடிப்பு இல்லை என்றாலும் தங்களது குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக நயன்தாரா தனது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க திட்டமிட்டதில் இருந்து, அதிக படங்களில் கமிட் ஆவதை நிறுத்திக் கொண்டார். அதேபோல் படத்தின் படப்பிடிப்பு என்றாலும், சென்னையைச் சுற்றியே இருக்கவேண்டும் என கோரிக்கை வைப்பதாக கூறப்படுகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர்களில் நயன்தாராவும் ஒருவர். இவரை இவரது ரசிகர்கள் நயன் என்றும் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைத்து வருகின்றனர். தொடக்கத்தில் படங்களில் நடித்து வந்த நயன் தனது திருமணத்திற்குப் பின்னர் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தனது கணவரான இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் உருவாக்கி படத்தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.

 

 இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு இன்று செப்டம்பர் 18ஆம் தேதி பிறந்த நாள். இன்று அவருக்கு 39வது பிறந்த நாள். இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுக்கு, முத்த மழை பொழிந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மொத்தம் நான்கு புகைப்படங்களை நயன்தாரா பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில், " எனது எல்லாமுமாக இருக்கும் உனக்கு (விக்னேஷ் சிவன்) பிறந்த நாள் வாழ்த்துகள். நான் உன்மீது வைத்துள்ள காதலை என்னால், வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. கடவுள் எப்போதுன் உன் வாழ்க்கையில் எல்லாமும் கிடைக்க ஆசிர்வதிப்பார், நமது குழந்தைகளான உயிர் உலக்-ஐப் போல" என கேப்சன் இட்டுள்ளார்.

நயன்தாரா பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படங்களில் இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொள்கின்றனர். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த பிரபலங்கள் தொடங்கி, ரசிகர்கள் வரை அனைவரும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நயன்தாரா பகிர்ந்துள்ள புகைப்படங்களுக்கு லைக்குகளை தட்டிவிட்டுக் கொண்டும், கமெண்ட் செக்‌ஷனில் வாழ்த்து கூறியும் வருகின்றனர்.


 

Share this story