இன்ஸ்டாகிராமில் இருந்து தனுஷின் வீடியோவை நீக்கிய விக்னேஷ் சிவன்...!

vignesh shivan

தனுஷ் ‘வாழு வாழவிடு’ என பேசிய வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்த நிலையில் தற்போது அந்த வீடியோவை நீக்கியுள்ளார். தமிழ் சினிமா துறையின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் தனது சிறுவயது முதல் முன்னணி நடிகையாக உயர்ந்தது வரையான சம்பவங்களின் தொகுப்பு, நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் உள்ளிட்டவற்றின் தொகுப்பை 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்ற தலைப்பில் ஆவணப்படமாக எடுத்துள்ளார். இந்த ஆவணப்படம் நயன்தாராவின் பிறந்தநாளான வரும் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இந்த ஆவணப்படம் சுமார் 50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆவணப்படத்தில் தான் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களின் சிறு காட்சிகளை நயன்தாரா வைத்துள்ளார். இந்த ஆவணப்படம் தொடர்பான டீசர் சமீபத்தில் வெளியானது. அந்த டீசரில் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் சிறு காட்சி, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சி இடம்பெற்றிருந்தது. இதனிடையே, நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகள், படப்பிடிப்பு காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளதற்கு அப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

nayan

இது தொடர்பாக நயன்தாராவுக்கு நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆவணப்படத்தின் டிரெய்லரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவுக்கு எதிராக நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நடிகர் தனுஷ் ரூ. 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.அதேவேளை, தன்மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பால் நடிகர் தனுஷ் பழிவாங்குகிறார் என்று நடிகை நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.இதனிடையே, நயன்தாராவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவரது கணவரும், டைரக்டருமான விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.தனுசின் வழக்கறிஞர் அனுப்பிய நோட்டீசையும், நடிகர் தனுஷ் பேசியும் வீடியோவையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.'வாழு வாழவிடு' என தனுஷ் பேசிய வீடியோவை பகிர்ந்த விக்னேஷ் சிவன், அன்பை பரப்புங்கள், தனுசின் பேச்சை நம்பும் அப்பாவி தீவிர ரசிகர்கள்,ரசிகைகளுக்காக கடவுளை பிரார்த்திக்கிறேன். மக்கள் மாறுவதற்காக பிரார்த்திக்கிறேன்' என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், வழக்கறிஞர் அனுப்பிய நோட்டீசுடன் தனுஷ் 'வாழு வாழவிடு' என பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்த விக்னேஷ் சிவன் தற்போது அந்த வீடியோவை நீக்கியுள்ளார். வீடியோவை நீக்கியதற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

Share this story