தோனியை இயக்கிய விக்னேஷ் சிவன்... புகைப்படங்கள் வைரல்...

தோனியை இயக்கிய விக்னேஷ் சிவன்... புகைப்படங்கள் வைரல்...

விளம்பர படப்பிடிப்புக்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் தமிழ் நடிகர் யோகி பாபு மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இணைந்து எடுத்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. 

இந்த விளம்பரத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்த பிறகு மூவரும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரியல் எஸ்டேட் விளம்பரம் ஒன்றில் தோனியுடன் யோகி பாபு இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில்தான் இதன் ஷூட்டிங் முடிந்துள்ளது.


தோனியை இயக்கியது குறித்து விக்னேஷ் சிவன், "நான் மிகவும் விரும்பிய ஒன்றை செய்துவிட்டேன். நான் மிகவும் மதிக்கும் ஒருவரும் எனது ரோல் மாடலுமான ஒருவரை இயக்கிவிட்டேன். அவருக்கு 'ஆக்‌ஷன்' என சொல்லிவிட்டேன். சொல்வதை கடந்து நான் மிகவும் விரும்பும் ஒரு நட்சத்திரம்" என அவர் பதிவிட்டுள்ளார். இதேபோல, யோகிபாபுவும் தோனியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

Share this story