பிள்ளை வாசத்தில் ஆசைகள் தோரணம் சூடுதம்மா……- அன்னையர் தின ஸ்பெஷல், புகைப்படங்களை பகிர்ந்த ‘விக்னேஷ் சிவன்’.

photo

இன்று அன்னையர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பலரும் இணையத்தில் தங்கள் வாழ்த்துகளையும், தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை நயந்தாராவின் முதல் அன்னையர் தின புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

photo

கடந்த ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா, வாடகைதாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைக்கு தாயானார். தொடர்ந்து குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதள பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் விக்னேஷ் சிவன். இந்த நிலையில் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு குழந்தையின் முதல் ஸ்பரிசத்தை நயன்தாரா எப்படி  அனுபவித்தார் என்ற அழகிய தருணத்தை நம்முடன் பகிர்ந்துள்ளார்.

photo

அழகான குட்டி விரல்களால் குழந்தை தீண்டும் போது நயன்தாரா முகத்தில் அப்படியொரு சிரிப்பு இதனுடன் கேப்ஷனாக “ உலகின் சிறந்த தாய்க்கு முதல் அன்னையர் தின வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் பலருமே இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

photo

Share this story