விக்னேஷ் சிவனின் படத்திற்கு புதிய தலைப்பு அறிவிப்பு..!
1721889795809

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் க்ரித்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கும் படம் தொடங்கிய போதே எல்ஐசி என டைட்டில் அறிவித்தனர். லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என அதற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு எதிராக எல்ஐசி நிறுவனம் வழக்கு தொடுத்தது. தங்கள் நல்ல பெயரை கெடுக்க இப்படி செய்வதாக படக்குழு மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகவும் LIC நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில் சர்ச்சையில் இருந்து தப்பிக்க விக்னேஷ் சிவன் ஒரு மாற்றத்தை டைட்டிலில் செய்து இருக்கிறார். LIK என டைட்டில் மாற்றப்பட்டு இருக்கிறது. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்பது தான் அதன் விரிவாக்கம்.