பெருந்துயரில் வயநாடு மக்கள்.. நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிவாரண உதவி...!


கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. நிலச்சரிவின் மீட்பு பணிகள் 4வது நாளாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் காண்போர் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பெருந்துயரில் மீள முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர். இந்த நிலையில், பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து ரூ. 20 லட்சம் வழங்கியுள்ளனர். 

Rowdy pictures

Share this story