'ஏகே 62' : “அஜித் சார் பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை…. “ – மனம் திறந்த 'விக்னேஷ் சிவன்'.

photo

அஜித் ரசிகர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துள்ள ஒரு அப்டேட் அஜித்தின் 62அவது படத்தை யார் இயக்க போகிறார், யார் தயாரிக்க போகிறார் மற்ற தேர்வுகள் யார் யார்? என்பது தான். இது குறித்து பல தகவல்கள் சமூகவலைதளத்தில் உலா வந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்கின்றனர். சமீபத்தில் அஜித்தின் தந்தை இறந்ததால் அப்டேட் மேலும் தள்ளிபோய் உள்ளது.

photo

இந்த நிலையில் ஏகே 62 குறித்து  முதல் முறையாக வாய்திறந்து பேசியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.  சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் ஏகே 62 படம் கைநழுவி சென்றது குறித்த கேள்விக்கு “ ஏமாற்றம் தான், அஜித் சார் பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை…. எனது கதியுன் இரண்டாம் பாகம் தயாரிப்பு தரப்பிற்கு திருப்தி இல்லை. எனக்கு கிடைச்ச வாய்ப்பு இப்போ மகிழ் திருமேனி சார் மாதிரி ஒருத்தருக்கு கிடைச்சதுல மகிழ்ச்சி. ஒரு ஃபேன்னா நான் கண்டிப்பா எஞ்சாய் பண்ணுவேன்.” என கூறியுள்ளார்.

photo

இந்த நேர்காணல் மூலமாக  அஜித்தின் 62வது படத்தை மகிழ்திருமேனி இயக்க போகிறது உறுதியாகிவிட்டது.

Share this story