சிம்பு பாராட்டியதை நினைவு கூர்ந்த விக்னேஷ் சிவன் பேச்சு!

vignesh

இயக்குனர் விக்னேஷ் சிவன்,  சிம்பு பாராட்டியதை நினைவு கூர்ந்துள்ளார். 


இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய நானும் ரெளடி தான் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. தற்போது இவர், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது.

wikki

அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா சீமான் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் படமானது 2025 கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் டிராகன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

pradeep

அப்போது பேசிய அவர், “என்னுடைய இறுக்கமான நேரத்தில் பிரதீப் உறுதுணையாக இருந்தார். அந்த நேரத்தில் அவரிடம் கூறிய கதை தான் எல்ஐகே. பிரதீப் ரங்கநாதன் ஒரு ஸ்டார் மெட்டீரியல். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. நான் முதன்முதலாக பாடல் எழுதும்போது, நீ நன்றாக பாடல் எழுதுகிறாய் என என்னிடம் சிம்பு சொன்னார். அவர் கொடுத்த ஐடியா விற்க்கு பிறகு தான், “எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும் பட்டாசு சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்” என பாசிட்டிவாக தொடங்கியது” என்றார்.

Share this story