நயன்தாராவால் பெருமைகொள்ளும் 'விக்னேஷ் சிவன்'- கியூட்டான டிவிட்டர் பதிவு.

photo

ஷாருக்கான், நயன்தாரா, தீபிகாபடுகோன் கூட்டணியில் அட்லீ இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகிவரும் இந்த படத்திலிருந்து நயன்தாராவின் மாஸ்ஸான லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது. அந்த போஸ்டரை பார்த்து பலருமே நயன்தாராவை பாராட்டிய நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் கியூட்டான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

photo

‘புயலுக்கு முன்பாக அமைதி’ என நடிகர் ஷாருக்கான் தலைப்பு கொடுத்து நயந்தாராவின் புகைப்படத்தை வெளியிட்ட நிலையில். அந்த போஸ்டுக்கு நடிகர் விக்னேஷ் சிவன் ‘ மகிழ்சியாகவும் பெருமையாகவும் இருக்கு தங்கமே!, மிகப்பெரிய படத்தில் ஷாருக்கானுடன் நடித்துள்ளாய் உனது பயணம் தற்போது தொடங்கியுள்ளது. நீ மிகவும் ஊக்கமளிக்கக்கூடிய மனைவி உன்னை நினைத்து நமது குடும்பம் பெருமைகொள்கிறது’ என பதிவிட்டுள்ளார்.


விக்னேஷ் சிவனின் இந்த பதிவு அதிகம் பகிரப்பட்டு   வருகிறது. படம் வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் கடந்த வாரம் வெளியான டிரைலர் ரசிகர்களை மிரள வைத்து படத்தின் மீதான எதிர்பார்பை மேலும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Share this story