அழகிய புகைப்படங்களுடன் அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்!

wikki


தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை இயக்கியதன் மூலமாக மிகப் பிரபலமாக மாறி இருக்கின்றார் விக்னேஷ் சிவன். முதன்முதலாக போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதன் பிறகு பல வருடங்களாக வாய்ப்புக்காக காத்திருந்தார். பின்னர் நானும் ரவுடிதான் என்ற திரைப்படம் இதற்கு மிகப் பெரிய வரவேற்பை கொடுத்தது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தின் போது தான் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்தனர். இதைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு நயன்தாராவை ரிஜிஸ்டர் மேரேஜ் செய்த விக்னேஷ் சிவன் 2022 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டார் நடிகை நயன்தாரா. தற்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து தங்களது குழந்தைகளை வளர்த்து வருகிறார்கள் தொடர்ந்து சினிமாவில் இருவரும் கவனம் செலுத்தி வருகிறார்கள். நடிகை நயன்தாரா சினிமாவில் அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். அதேபோல் விக்னேஷ் சிவனும் பிரதிப் ரங்கநாதனை வைத்து lik என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். 

wikki

இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய விக்னேஷ் சிவன் அவ்வபோது தனது மனைவி நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது தனது அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு அழகிய புகைப்படங்களுடன் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது "ஒவ்வொரு முறையும் நான் என் குழந்தைகளை பார்க்கும்போது நிரம்பி வழியும் அன்பின் அளவை விவரிக்க முடியாது.. அதே நேரத்தில் காதல் எத்தனை வருடங்கள் கடந்தாலும் குறைந்து போவதில்லை . பெற்றோர்கள் நம்மை தினமும் அப்படித்தான் உணர்கிறார்கள். நாம் எவ்வளவு வளர்ந்தாலும் அந்த உணர்வு அப்படியே இருக்கும். அவர்கள் விரும்பியபடி அவர்களை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்திருப்பது மட்டும்தான் நம்முடைய குறிக்கோள். ஒவ்வொரு முறையும் நாம் அவர்களை மகிழ்ச்சியாக சிறப்பாக உணர வைக்கும் போது வாழ்க்கை அழகாக இருக்கும். இனிய பிறந்தநாள் குமாரி. நீ இல்லாமல் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். லவ் யூ அம்மா, பல வருடங்கள் உங்கள் பிறந்தநாளை இதே சிரிப்புடன் அமைதியுடன் கொண்டாட வேண்டும்" என்று பதிவிட்டிருக்கின்றார். 

Wikki

Share this story