புதிய சிக்கலில் விக்னேஷ் சிவனின் ‘எல்.ஐ.கே’!

LIK

விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘எல்.ஐ.கே’ திரைப்படம் புதிய சிக்கலில் சிக்கியிருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘எல்.ஐ.கே’. அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தினை லலித் குமார், நயன்தாரா ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள். சமீபத்தில் அனிருத் பிறந்த நாளை முன்னிட்டு ‘தீமா’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
 இதனிடையே, ‘எல்.ஐ.கே’ படத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் குறிப்பிட்ட பட்ஜெட்டை விட அதிகப்படியாக போய்விட்டது. இதனால் விக்னேஷ் சிவன் - லலித் குமார் இருவருமே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி இனிவரும் படத்துக்கான செலவினை நயன்தாராவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாமல் உள்ளது. ஆகையால் நடிகர்களின் தேதிகளும் வீணாகிறது. இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளதால், விரைவில் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Share this story