விக்னேஷ் சிவன் வரிகளில் தேவரா படத்தின் தாவூதி வீடியோ பாடல் வெளியானது

Davudi

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் மற்றும் சுத்தமல்லி சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.

null



இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் 3 வது பாடலான தாவூதி வீடியோ பாடல் இன்று வெளியாகியது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். துள்ளல் இசையுடன் ஜூனியர் என்.டி.ஆரும் ஜான்வி கபூரும் இணைந்து சிறப்பான நடனத்தை இப்பாடலுக்கு கொடுத்துள்ளனர். இப்பாடல் யூடியூபில் ட்ரெண்டாகி வருகிறது.

Share this story