விக்னேஷ் சிவனுக்கு பிறந்தாள் வாழ்த்து தெரிவித்த மனைவி நயன்தாரா...

விக்னேஷ் சிவனுக்கு பிறந்தாள் வாழ்த்து தெரிவித்த மனைவி நயன்தாரா...

இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு, அவரது மனைவியும் நடிகையுமான நயன்தாரா பிறந்தாள் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். அதை தொடர்ந்து, நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து பணியாற்றினார் விக்னேஷ் சிவன். இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று விக்னேஷ் சிவனை முன்னணி இயக்குநர்களில் ஒருவராக நிலைநிறுத்தியது. 

விக்னேஷ் சிவனுக்கு பிறந்தாள் வாழ்த்து தெரிவித்த மனைவி நயன்தாரா...

அதையடுத்து, தானா சேர்ந்த கூட்டம், பாவ கதைகள், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

நானும் ரவுடிதான் படப்பிடிப்பின்போதே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலிக்கத் தொடங்கினர். பல வருடங்கள் கழித்து கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகினர். 

விக்னேஷ் சிவனுக்கு பிறந்தாள் வாழ்த்து தெரிவித்த மனைவி நயன்தாரா...

இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். அவருக்கு நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, விக்னேஷ் சிவனின் மனைவியும், நடிகையுமான நயன்தாராவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். 

விக்னேஷ் சிவனுக்கு பிறந்தாள் வாழ்த்து தெரிவித்த மனைவி நயன்தாரா...

Share this story