ஹேக்கர்களுக்கு நன்றி சொல்லி கோரிக்கை வைத்த விக்னேஷ் சிவன்! – புதுசா இருக்கே!......

photo

இயக்குநர் விக்னேஷ் சிவனின் சமூகவலைதள பக்கம் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்ட நிலையில், ஹேக் செய்தவர்களுக்கு அவர் விடுத்துள்ள கேரிக்கை பலரையும் வியக்க வைத்துள்ளது.

photo

போடா போடி படத்தின் மூலமாக சினிமாதுறையில் இயக்குநராக அறிமுகமானாலும் இவர் பிரபலமானது என்னமோ ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தின் மூலம் தான். லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டு மேலும் பிரபலமானார். இந்த நிலையில் சமீபத்தில்  இவது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. தொடந்து ஹேக் செய்யப்பட்ட தனது  பக்கம் மீண்டும் மீட்கப்பட்டு உள்ளதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.   

 photo

 அதுமட்டுமல்லாமல், ஹேக் செய்தவர்களுக்கு வினோத கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார் அதில் அவர் கூறியதாவது என்னுடைய டுவிட்டர் பக்கம் மீட்கப்பட்டுவிட்டது. கடந்த ஒரு வாரமாக நான் மிகவும் நிம்மதியாக இருந்தேன். ஹேக் செய்தவர்களுக்கு நன்றி, அப்ப அப்ப இந்த மாதிரி பண்ணுங்க” என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரொம்ப புதுசா இருக்குன்ணே… என பதிவிட்டு வருகின்றனர்.

photo

ஏகே 62 படத்திலிருந்து  விலகிய பின்னர் தற்போது பிரதீப் ரங்கநாதனுடன் கைகோர்த்துள்ள விக்கி அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்கது.

Share this story