விஜய்68 படப்பிடிப்பு அக்டோபரில் பூஜையுடன் தொடக்கம்

விஜய்68 படப்பிடிப்பு அக்டோபரில் பூஜையுடன் தொடக்கம்

விஜய் நடிக்கும் 68-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் பூஜையுடன் தொடங்குகிறது.

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 3டி விஎஃப்எக்ஸ்   டெக்னாலஜி இப்படத்தில் பயன்படுத்தப்படவுள்ளது. 

இந்நிலையில், விஜய் 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் பூஜையுடன் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story