ஹெச்.வினோத்தின் ‘விஜய் 69’ : 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்

vijay 69

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 69’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. முக்கியமான காட்சிகள் இதில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘தி கோட்’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 4-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 4-ம் தேதி தொடங்கியது.vijay 69

 
அதில் பிரமாண்ட அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பிலிருந்து ‘ப்ரேக்’ எடுத்துக் கொண்ட விஜய், விக்கிரவாண்டியில் கட்சி மாநாட்டை நடத்தினார். தீபாவளி பண்டிகையை முடிந்து இன்று இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story