அந்த படம் நல்ல படம்தான்.. ஆனா ‘பீஸ்ட்’ வசூல்ல நெருங்கக்கூட முடியல - முக்கிய தகவலை வெளியிட்ட திருப்பூர் சுப்ரமணியம் !

vijay

பீஸ்ட் வசூலை அந்த படம் நெருங்கக்கூட முடியவில்லை என்று திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

தென்னிந்தியாவில் மிகப்பெரிய நடிகராக இருப்பவர் விஜய். அவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறுகின்றன. விஜய் திரைப்படங்கள் என்றாலே திரையரங்குகளில் திருவிழா கோலம் தான். ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும் விஜய் படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். 

vijay

அந்த வகையில் ‘மாஸ்டர்’ படத்திற்கு விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘பீஸ்ட்’. ஒரு பிரபலமான மாலை தீவிரவாதிகள் கடத்திவிட்ட நிலையில் அதிலிருந்து விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை. இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் மற்ற விஜய் படங்கள் போன்று வசூலை குவித்தது. 

vijay

இந்நிலையில் இணையத்தள ஊடகத்திற்கு பேட்டியளித்த திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், கடந்த ஏப்ரம் மாதம் விஜய் பீஸ்ட் மற்றும் யாஷின் கேஜிஎப் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியானது. இதில் பீஸ்ட் போதிய வெற்றியை பெறவில்லை. ஆனால் கேஜிஎப் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் கேஜிஎப் படத்தை விட பல மடங்கு வசூலில் பீஸ்ட் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் தமிழ் படங்கள் மட்டுமே ஓடும் என்று கூறினார். இது விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story