விஜய் சேதுபதியின் 'டிஎஸ்பி' ஃப்ர்ஸ்ட் சிங்கிள்.. முக்கிய அறிவிப்பு !

dsp

விஜய் சேதுபதியின் 'டிஎஸ்பி' படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தென்னிந்திய சினிமாவில் வியக்கத்தக்க நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர், தற்போது ஜவான், மேரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர பொன்ராம் நடிப்பிலும் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். போலீஸ் கதைக்களம் கொண்ட இப்படத்தில் வாஸ்கோடகாமா என்ற ஐபிஎஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க திண்டுக்கல் பகுதியில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த மிஸ் இந்தியா அழகி அனு க்ரீத்தி கதாநாயகியாக நடிக்கிறார். 23 வயதேயாகும் இவர் பிரபல விளம்பர மாடலாக இருக்கிறார். இதுதவிர பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க திண்டுக்கல் பகுதியில் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லா இருக்குமா என தொடங்கும் இந்த பாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story