தெலுங்கில் நாளை வெளியாகும் ‘வாரசுடு’.. ரசிகர்களை கவருவாரா விஜய் ?

Vaarasudu

தெலுங்கில் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய்யின் மாஸான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

Vaarasudu

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவான இப்படம் பொங்கலையொட்டி நேற்று முன்தினம் தமிழகத்தில் உள்ள திரையரங்கில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் வசூலை குவித்து வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பு நாளை வெளியாகவுள்ளது. தமிழில் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் தெலுங்கில் தாக்குபிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’, சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ ஆகிய படங்கள் பட்டையை கிளப்புயுள்ளது. இந்த ரேஸில் நாளை இணையவிருக்கும் ‘வாரசுடு’ சாதிக்குமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

Share this story