அடிதூள்.. குட்டி ஸ்டோரி கேட்க ரெடியா ?... விரைவில் 'வாரிசு' ஆடியோ லாஞ்ச் !

varisu

 விஜய்யின் 'வாரிசு' படத்தின் ஆடியோ லாஞ்ச் விரைவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் விஜய், குடும்ப பின்னணி கொண்ட படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை  தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கி வருகிறார்.  ‘வாரிசு’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

varisu

இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் சார்பில் தில் ராஜூ தயாரித்து வருகிறார். இந்த படம் விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படம் போன்று இல்லாமல் குடும்ப சென்டிமெண்ட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படம் பொங்கலுக்கு  வெளியாகவுள்ளது. 

varisu

இதையொட்டி இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதற்கான தேதி இறுதி செய்யப்பட்ட நிலையில் விரைவில் அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. அதனால் நிச்சயம் இந்த ஆடியோ விழாவில் ஒரு குட்டி ஸ்டோரியை எதிர்பார்க்கலாம். இதற்கிடையே கடைசியாக வெளியான 'மாஸ்டர்' படத்தின் போது கொரானா காலமாக இருந்ததால் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story