'படம் எடுக்கறது ஒன்னும் ஜோக் இல்ல' - விமர்சனங்களுக்கு வம்சி பதிலடி !

vamsi

'வாரிசு' படத்தின் எதிர்மறை விமர்சனத்திற்கு இயக்குனர் வம்சி தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தமன் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் தாறுமாறான ஹிட்டித்துள்ளது. 

vamsi

கடந்த 11-ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த படம் இன்று வரை 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தை குடும்பம் குடும்பமாய் ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். அதேநேரம் இந்த படத்திற்கு எதிராக சில எதிர்மறை விமர்சனங்களும் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. 

vamsi

இந்நிலையில் இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குனர் வம்சி, காரசார கருத்துக்களை கூறியுள்ளார். அதில் இப்போதெல்லாம் படம் எடுப்பது என்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா ?.. ஒரு படத்திற்காக எத்தனை பேர் உழைக்கிறார்கள் தெரியுமா ?.. படம் எடுப்பது என்பது ஜோக் இல்ல. இயக்குனர்கள் பல தியாகங்கள் செய்கிறார்கள். பலரும் ஒரு படத்தை எடுக்க கடினமாக உழைத்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். 


 

Share this story