விஜய்ன்னா சும்மாவா.. ரிலீசுக்கு முன்னரே வசூலை குவித்த ‘வாரிசு’ !

varisu

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தின் முக்கிய வெளியாகியுள்ளது. 

 தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை தில் ராஜூவின் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

varisu

இந்த படம் விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படம் போன்று இல்லாமல் குடும்ப சென்டிமெண்ட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். வரும் பொங்கலுக்கு இப்படம் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் இந்த படம் வெளியாவதற்கு முன்னரே வசூலை குவித்து வருகிறது. அந்த வகையில் இந்த படத்தை வெளியிடும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ 70-க்கும், அமேசான் ஓடிடி உரிமை 60 கோடிக்கும், டி சீரிஸ் ஆடியோ உரிமை 10 கோடிக்கும், தொலைக்காட்சி உரிமை சன் டிவி 60 கோடிக்கும், இந்தி டப்பிங் உரிமை 38 கோடிக்கும், கோல்ட் மைன் நிறுவனம் 32 கோடிக்கும், கேரளா மற்றும் கர்நாடக உரிமை 16 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த படம் வெளியாவதற்கு முன்னரே 280 கோடிக்கு விலைபோயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story