நான் அவசரப்பட்டுட்டேன்...வெங்கட் பிரபுவிடம் தளபதி விஜய் சொன்ன விமர்சனம்.. !
1722948958000
நடிகர் விஜய், தனது 68வது படமான கோட் படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துவிட்டார். படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, கேரளா, ரஷ்யா என பல இடங்களில் அட்டகாசமாக நடந்தது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துகொண்டிருக்க படத்தின் 3வது சிங்கிள் பாடலும் வெளியாகிவிட்டது. ரசிகர்களும் விஜய்யை கண்டு ஆச்சரியத்துடன் பாடலை ஹிட்டாக்கி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் விஜய் கோட் படத்தை சமீபத்தில் பார்த்ததாகவும், படத்தை பார்த்த விஜய், கலக்கிட்ட, அவசரப்பட்டு ஓய்வு அறிவித்துவிட்டேன், இன்னொரு படம் உன்கூட பண்ணிருக்கலாம் என இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கூறியுள்ளாராம். இதனால் விஜய்யின் கமெண்ட் கேட்டு படக்குழு அனைவருமே செம குஷியில் உள்ளார்களாம்.