தமிழ் திரையுலகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா - விஜய், அஜித்துக்கும் அழைப்பு

தமிழ் திரையுலகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா  - விஜய், அஜித்துக்கும் அழைப்பு

தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாட சிறப்பு ஏற்பாடுகளை திமுகவினர் செய்தனர். தமிழக அரசு சார்பிலும் நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவைத் தமிழ்த் திரையுலகம் சார்பிலும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பிரமாண்ட விழா அடுத்த மாதம் சென்னையில் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா  - விஜய், அஜித்துக்கும் அழைப்பு

இதையொட்டி, நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நிர்வாகிகள், கலைஞர் நூற்றாண்டு விழாவை அடுத்த மாதம் டிசம்பர் 24-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், அனைவரும் கலந்து கொள்ள வசதியாக சென்னை சேப்பாக்கம் மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், இவ்விழாவில் அஜித் மற்றும் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வருவார்கள் என நம்பிக்கை இருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி தெரிவித்து உள்ளார். 
 

Share this story