விஜய்யுடன் மோதும் பிரபல தெலுங்கு நடிகர்... வெற்றி பெறுவது யார் ? ‌

leo

 விஜய்யின் 'லியோ' படம் வெளியாகும் அதே தேதியில் பாலகிருஷ்ணாவின் படமும் வெளியாக உள்ளதால் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. 

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

leo

இதேபோன்று தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பகவந்த் கேசரி. இந்தப் படம் பாலகிருஷ்ணாவின் வழக்கமான ஆக்சன் அதிரடி திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படமும் வரும்  அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

leo

'லியோ' மற்றும் பகவந்த் கேசரி ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளது. தமிழில் 'லியோ' படத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லாத நிலையில் தெலுங்கில் பகவந்த் கேசரி படத்தால் திரையரங்குகள் கிடைப்பது சந்தேகமாகியுள்ளது. இது 'லியோ' படத்தின் தெலுங்கு வசூலை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. 

Share this story